கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்!

0
140

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்!

உலகிலேயே மிக சிறந்த பழம் சிவப்பு கொய்யாப்பழம் ஆகும் இதில் உள்ள சிறப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நம் உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் தான். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய் ஏற்படுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கொய்யாப்பழம் சாப்பிட்டு வர உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கொய்யாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக கொய்யாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கவும் கொய்யாப்பழங்கள் உதவுகின்றனர். லைக்கோ பீனிக் யூ சீட்டின் மற்றும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்சினேடிவ்களாக பயன்படுகிறது. இவை புற்றுநோய் ஏற்படும் செல்களை அழிக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சாப்பிடக்கூடிய மிகச்சிறந்த பழம் கொய்யா பழம் ஆகும். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. கண் பார்வை திறன் குறைவதை தடுக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் அதிகப்படியான வைட்டமின் ஏ உள்ளதன் காரணமாக பார்வைத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்க கூடியதாகவும் உள்ளது இதில் அதிகப்படியான மெக்னீசியங்கள் நிறைந்துள்ளது. உடலிலுள்ள தசைகளை மற்றும் நரம்புகளை ஓய்வாடையை செய்ய பயன்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

author avatar
Parthipan K