புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!!

0
242
#image_title

ஹைதராபாத்தில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை.மேலும் மைத்ரி மூவிஸ் அலுவலகம் மற்றும் இரண்டு தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மைத்ரி நிறுவனம் மகேஷ் பாபு, ராம்சரண், அல்லு அர்ஜுனா உள்பட பிரபல நடிகர்களை வைத்து இதுவரை 17 படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதன் கணக்கு விவரங்களை வருமான வரித்துறையினருக்கு சரிவர தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர் நிறுவன தயாரிப்பாளர்கள் உள்பட புஷ்பா பட இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் புஷ்பா பட இயக்குனர் ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் பகுதியில் 2019 ஆம் ஆண்டு 8 கோடி மூன்றடுக்கு மாடி பங்களா ஒன்று வாங்கியதாகவும் இதற்கு 11 கோடி செலவில் இன்டீரியல் செய்ததாகவும் இதில் 5 கோடிக்கு மட்டும் இத்தாலியன் மார்பில் வாங்கப்பட்டதாகவும் மேலும் இவர் வாங்கிய சம்பளத்தின் 90% கணக்கை வருமானவரித் துறையினருக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.

Previous articleபூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்த சூப்பர் ஸ்டார்!!
Next articleடுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!