டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

0
124
#image_title

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க மாவட்ட இயக்குனர் ஜி.ஆர்.வெங்கடேஷின்- மணிவிழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், திருநங்கைகள், பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க முடியாத நிலை வந்து விடுமோ என்று அச்சம் இருந்தது. இருந்தபோதிலும் மாலை நேரத்திலும் இப்போது சட்டமன்றம் நடைபெற்று வருகிறது.

அந்த சூழலில் தான் நான் அங்கிருந்து வெளியே வந்தேன் அங்கு ஒருவர் என்னை கேள்வி கேட்டார் என்ன வெளி நடப்பு செய்தீர்களா என்று கேட்டனர். அந்தளவுக்கு இந்நிகழ்ச்சி எனக்கு முக்கியமானது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பலமுறை கூறியிருக்கிறார் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் தான் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கூறுவார். அதேப்போல் தான் இந்நிகழ்ச்சிகள் நடந்தது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்,
மணிவிழா என்றார் ஆனால் இங்கு அவரது மனைவி இல்லை. ராமருக்கு அனுமான் போல ஜி.கே.வாசனுக்கு வெங்கடேஷ். மனைவியோடு வருவார் வாழ்த்தலாம் என்று இருந்தேன். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எனக்கு அளிக்கவில்லை. இருந்தாலும் அவரை வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸ்க்கு இவ்விழா இல்ல விழா. எனது கடினமான காலங்களில் துணைநின்றவர் வெங்கடேஷ். ஜி.கே. மூப்பனார் பெயரில்தான் ஜி.கே.அரிமா சங்கம் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற வில்லையென்றாலும் எனக்கு துணையாக வெங்கடேசன் உண்மையான தொண்டனாக இருக்கிறார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ். வி.சேகர், யாரையும் குறிப்பிட்டு நான் டுவிட்டரில் பதிவு செய்யவில்லை, வேறு யாரோ தன்னை தான் சொல்கின்றனர் என நினைத்துகொள்ள கூடாது. அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சினை இல்லை, அண்ணாமலையிடம் போட்டியிட்டால் என் மகனிடம் போட்டியிடுவது போலதான் என் வயதில் பாதி வயது மட்டுமே அவருக்கு உள்ளது.

அரசியலில் எந்த தேர்தலில் நிற்க மாட்டேன் என்றே பாஜகவில் இணைந்தேன், என்னை பொறுத்தவரை மூன்றாவது முறையாக பாஜக 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இந்தியாவில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் அங்கு எல்லாம் உங்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என மோடியிடம் கூறியுள்ளேன், எனவே அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்தார்.

author avatar
Savitha