மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு!!

Photo of author

By Gayathri

மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு!!

Gayathri

Income tax exemption for those earning up to 1 lakh per month!!

இன்று நடைபெற்று வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத் தளங்களை மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுற்றுலா தளங்களுக்கு விசா கட்டணத்திலிருந்து முற்றிலும் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். உயிர் காக்கும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட 36 வகை மருந்துகளுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கு எல்லாம் விலக்கு அறிவித்திருப்பது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகிறது.

மின்சார வானங்கள் மற்றும் பேட்டரி சம்பந்தப்பட்ட மெட்டீரியல்ஸ்க்கு வரி குறைப்பு. காப்பிட்டு துறையில் நேரடி முதலிட்டிற்கு 100% அதிகரிப்பு. ஆண்டு வருமானம் 12 லட்சம் எனில் வரி கட்ட தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்தும் சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் ஆண்டுக்கான வரி 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடி மக்களுக்கான வரி பிடிப்பு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.

பெண்கள் தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இரண்டு கோடி வரை டேர்ம் லோன் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய நான்கு ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பட்ஜெட் அமுலுக்காக நிதி அமைச்சர் உரையாற்றியுள்ளார். பிப்ரவரி மூன்றிற்கு அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.