திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்ட திமுகவில் முக்கிய நபராக வலம் வந்து கொண்டிருந்த இவரது வீட்டில் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

திமுக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் அவருடன் பையா கவுண்டர் அவர்களும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் சென்னை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment