தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

0
186

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

தமிழ் சினிமா பிரபலங்களான அன்புச்செழியன் மற்றும் தாணு ஆகியோர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபலங்களின் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரிச்சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருபவர் மதுரை அன்புச்செழியன். சமீபத்தில் இவர் தி லெஜண்ட் திரைப்படத்தை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்.

அதே போல தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து பிரம்மாண்டமாக படங்களை தயாரித்து வருகிறார். தனுஷ், சூர்யா, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் இடத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனைகள் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாகவும் இதுபோல சில தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருடன் போலீஸ் விளையாட்டு! வினையானது சிறுவன் பரிதாப பலி!
Next articleஉதவி அளிக்க  சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?..