Increase Breast Milk: பெண்களே தாய்பால் சுரப்பு அதிகரிக்க இந்த ஊட்டச்சத்து பால் குடியுங்கள்!!

Photo of author

By Divya

Increase Breast Milk: பெண்களே தாய்பால் சுரப்பு அதிகரிக்க இந்த ஊட்டச்சத்து பால் குடியுங்கள்!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது கட்டாயமான ஒன்று.தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான பலவகை ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இதனால் குழந்தைக்குகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க குறைந்தது 1 வருடமாவது அவர்களுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு என்பது மிகவும் குறைவாக இருக்கும்.இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.எனவே தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பாலை குடித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)கொண்டைக்கடலை
2)பாதாம்
3)முந்திரி விதை
4)வெள்ளை பூசணி விதை
5)வால்நட்
6)பேரிச்சம் பழம்
7)பசும் பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 5 முந்திரி பருப்பு,2 வால்நட்,3 பாதாம் பருப்பு,1/4 தேக்கரண்டி கொண்டைக்கடலை மற்றும் 1 தேக்கரண்டி வெள்ளை பூசணி விதையை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை நன்கு ஆற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி விடவும்.

பிறகு 2 பேரிச்சம் பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பவுடர் மற்றும் பேரிச்சம் பழத்தை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள்
2)பேரிச்சம் பழம்
3)தேங்காய் துருவல்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து வறுக்கவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 4 தேக்கரண்டி தேங்காய் துருவல்,2 விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம் மற்றும் வறுத்த கருப்பு எள் சேர்த்து மைய்ய சேர்த்து மைய்ய அரைக்கவும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.