ஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

0
286
#image_title

ஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

நம் உடலில் இன்றியமையாத ஒன்று என்றால் அவை ரத்தம் தான். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதன் மூலம் தான் நம் உடல் ஆரோக்கியமாக காணப்படும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்கு தேவையான பொருட்கள் :அரை கிலோ கடலை பருப்பு , ஒரு டீஸ்பூன் சோம்பு , கால் கிலோ பீட்ரூட் , நான்கு இலவங்கம் , ஆறு காய்ந்த மிளகாய் , மூன்று பெரிய வெங்காயம், இரண்டு பட்டை , ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு.

செய்முறை :முதலில் அரை மணி நேரம் கடலை பருப்பை ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் சோம்பு, பட்டை, கிராம்பு காய்ந்த மிளகாய், சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். மேலும் வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ள வேண்டும்.

அதனையடுத்து துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்ட வேண்டும்.பிறகு எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை தயாராகிவிடும்.

 

Previous articleகர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்!
Next articleஉடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!