செலவின்றி உடலில் IMMUNITY POWER அதிகரிக்க.. இந்த காயை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

உடலில் நோய் பாதிப்புகள் எளிதில் அண்டாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.இதை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உணவுகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

இந்த நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.ஜூஸாகவோ அல்லது துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.தற்பொழுது நெல்லிக்காய் துவையல் செய்வது குறித்து விலக்கப்பட உள்ளது.

தேவையான பொருட்கள்:

1)பத்து மலை நெல்லிக்காய்
2)ஐந்து பூண்டு பற்கள்
3)இரண்டு வர மிளகாய்
4)எலுமிச்சம் பழ சைஸில் புளி
5)இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய்
6)ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
7)ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து பருப்பு
8)தேவைக்கேற்ப உப்பு
9)சிட்டிகை அளவு பெருங்காயத் தூள்
10)ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்:

பெரிய நெல்லிக்காய் பத்து என்ற எண்ணிக்கையில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் விதைகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

பிறகு அடுப்பில் இரும்பு கடாய் ஒன்றை வைத்து சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு,ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து பருப்பு,இரண்டு வர மிளகாய்,நான்கு பூண்டு பற்களை போட்டு வதக்கி எடுக்கவும்.

பிறகு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.அடுத்ததாக நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சம் பழ சைஸில் புளி சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
பின்னர் இதை மிக்சர் ஜாரில் போடவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.இந்த நெல்லிக்காய் துவையலை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவைப்பட்டால் எண்ணெய்,கடுகு,கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த நெல்லிக்காய் துவையலை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி,செரிமானப் பிரச்சனை சரியாகும்.இதில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.உடலில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகரிக்க நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.

முடி சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் தீர்வாக திகழ்கிறது.நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.