கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! பிளஸ் 2 மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!!
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பப்டுபவர் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
ஜூன் 16 ஆம் தேதி கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பி.ஏ.தமிழ் , பி.காம்.,பி.காம்.சி.ஏ.,பி.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது .
இதில் சில பட்டப்படிப்பிற்கு சேர்க்கை நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசாணையை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும் அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 20% சதவீதம், சுயநிதி கல்லூரிகளுக்கு 10% சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15% சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.