திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

0
190
New Update in Tirupati!! Devotees can easily see Sami!!
#image_title

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களிலும் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோவில்களை கட்டி வருகின்றனர்.

ஆந்திராவிற்கு அருகே திருப்தி தேவஸ்தானம் 6 கோவில்களை கட்டியுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் 70 கோடி ரூபாய் செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குஜராத் மற்றும் சதீஷ்கரிலும் கோவில் கட்டப்பட உள்ளதாக திருப்பதி தேவாஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

குஜராத் மற்றும் சதீஷ்கரில் கோவில்கள் கட்டப்பட உள்ளதாகவும், நில ஒதுக்கீடு முதலிய முடிவுகள் இறுதி கட்ட பணியில் இருப்பதாகவும் கூறினார்.மேலும் நில ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என அவர் தெரிவித்தார்.திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
CineDesk