தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்பொழுது நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த பணி தேர்வில் உள்ள காலியிடங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 651 ஆக இருந்த காலி பணியிடமானது தற்பொழுது 992 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதில் மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி பொறியாளர் மற்றும் வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளை நிரப்பும் வண்ணம் ஏற்கனவே 651 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அதனை 992 காலி பணியிடங்களாக அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த பணிகளுக்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்த தேர்வுகளின் முடிவானது வருகிற பிப்ரவரி மாதம் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்திருப்பதாவது :-
நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.மேலும், இதன் மூலம் புதிதாக 341 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் பலவற்றில் காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் புதிதாகவும் நிறைய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.