வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

0
254

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

 

பெரும்பாலும் பீரோ லாக்கரில் முக்கியமான பொருட்கள், நகைகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து வைப்போம்.மேலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில ஆன்மிக பொருட்களையும், எந்திரங்களையும் வைப்பது வழக்கம்.எனவே இந்த பீரோ லாக்கரில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.வீட்டில் பெரும்பாலும் லட்சுமி குபேர எந்திரம், மகாலட்சுமி எந்திரம் போன்றவற்றை வைப்பதால் மேலும் மேலும் தங்கு தடையின்றி பணம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல் பீரோ லாக்கர் உள்ளே மகாலட்சுமி படம் வைப்பது பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். ஆனால் அந்த மகாலட்சுமி படம் வகை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகம் ரீதியாக மகாலட்சுமி படத்தை வீட்டின் தலைவாசல் பகுதிக்கு மேலே உட்பக்கமாக வருமாறு வைப்பது லட்சுமி தேவியை உள்ளே வரவழைக்க சிறந்த முறையாக பார்க்கப்படுகிறது. இதை போன்றே பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் இந்த மகாலட்சுமி படத்தை வைப்பதால் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகும்.பணம் இல்லை என்றாலும் பீரோவின் லாக்கர் ஆனது மகாலட்சுமி தங்கும் இடமாக கருதப்படுவதால் அந்த இடத்தில் மகாலட்சுமி படத்தை வைத்திருப்பது வருமானம் பெருக வழி வகுக்கும்.

மகாலட்சுமியில் கஜலட்சுமி என்கின்ற தேவியின் படத்தை வைப்பது தான் யோகத்தை தரும். கஜலட்சுமியானவள் யானைகளை கொண்டிருப்பவள். இந்த கஜலட்சுமி தேவியார் சிவப்பு அல்லது பச்சை வஸ்திரம் உடுத்திக் கொண்டிருக்கும் படத்தை வைப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும்.

இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரதான பிரச்சனை வருமான குறைபாடு ஆகும். வருமானம் பெருகவும், தொழில் வியாபாரம் சிறக்கவும் கஜலட்சுமி தேவியின் அருள் வேண்டும்.

பீரோ லாக்கரில் இந்த படத்தை சிறிய அளவிலாவது வாங்கி, வடக்கு திசையை பார்த்தவாறு வையுங்கள். அந்த படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கண்ணாடி குவளையில் நான்கைந்து பச்சை கற்பூரம் போட்டு வையுங்கள்.

பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆகையால் அன்றாட செலவிற்கான தொகையையும் இந்த குவலையில் போட்டு வையுங்கள். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து தினசரி செலவுகளைச் செய்யுங்கள்.

வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த படத்திற்கும் தீபம் காட்டுங்கள். வாரம் ஒருமுறை படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு கொஞ்சம் ரோஜா பூவை வையுங்கள். சிவப்பு மலர்கள் வைப்பது கஜலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானது.ஆகையால் சிவப்பு வர்ண மலர்களை கொண்டு பூஜை செய்யுங்கள். இதனால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.பீரோவில் வைக்கக்கூடாதவை, பூஜையறையில் நம் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல் தான் பீரோவில் கூட முன்னோர்களின் படங்களை கட்டாயம் வைக்கக்கூடாது.

 

Previous articleஎம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?
Next articleஉங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!…