உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!…

0
77

 

உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!…

மழைக்காலமெல்லாம் நமக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கியதால் கோடை வெயிலில் அவஸ்தை பட்டு தற்போது ஓய்வு பெறுகின்றோம். வானிலை மாற்றம் காரணமாக நம் முடி ஆரோக்கியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முடி அதிக அளவு கொட்டுகிறது. நம் உடலில் அதிக வியர்வை பலருக்கு பொடுகு தொல்லையை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் நம் கூந்தலை எப்படி பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
உங்கள் தலைமுடியை மழை நீரிலிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள். நீங்கள் மழையில் நனைந்திருந்தால் வீட்டிற்கு வந்தவுடன் உடனே தலை முடியை சுத்தம் செய்யுங்கள். தலைமுடியில் கோர்த்துள்ள ஈதப்பரத்தை ஃபேன் போட்டு உலர விடுங்கள்.

மேலும் தரமான இயற்கை மூலப்பொருள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு மூலம் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். புரோட்டின் மற்றும் கெரட்டின் நிறைந்த ஷாம்பு தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இது சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் முடியும் சேதத்தையும் குறைக்கிறது.

இந்நிலையில் சரியான ஹேர் ஆயில் முடி உதிர்வை தடுக்கும். மேலும் முடிக்கு எண்ணெய் வழங்கும் ஊட்டச்சத்துக்கள் எவை என்று நம்மால் ஒப்பிட முடியாது. அதனால்தான் பாரம்பரியமாக பராமரிப்புக்கு முடி எண்ணெய் அதன்படி பளபளப்பான கூந்தலுக்கு ஒரே இரவு முழுவதும் எண்ணெயை தேய்க்கலாம் அல்லது இரண்டு மணி நேரம் வைத்திருந்து முடியை ஷாம்பு போட்டு நன்கு அலச வேண்டும். மேற்கூறியவற்றை அனைத்தும் விடாமல் கடைப்பிடித்தால் உங்கள் முடியும் கொட்டாமல் நீளமாக வளரும்.

 

author avatar
Parthipan K