சபரிமலை கோவிலில் அதிகரித்த கூட்டம்!! அலைமோதும் பக்தர்கள்!!

0
87
Increased crowd at Sabarimala temple!! Pilgrims of devotees!!
Increased crowd at Sabarimala temple!! Pilgrims of devotees!!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்து திருப்புகின்றனர். இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு  92,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரகுத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். டிசம்பர் 18-ம் தேதி  இரவு 10 மணி வரை 26 லட்சத்து 8, 349 பக்தர் தரிசனம் செய்த்துள்ளனர்.

இது நேற்று 27 இலட்சத்தை கடந்தது. மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவரம் அடைந்துள்ளது. வரும் டிசம்பர் 26-இல் மண்டல பூஜை நடக்கிறது. அன்று அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 11 மணியுடன் முடியும். மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். அதன் பிறகு அடைக்கப்படும் நடை மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

Previous articleஅமெரிக்காவிற்கு எழுந்த புதிய சிக்கல்!!  ரஷ்யா போரை நிறுத்தினாலும் நாங்கள் தொடருவோம் வடகொரியா அறிவிப்பு!!  
Next articleசரியத் தொடங்கியது தங்கம் விலை!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!