கிராமிய கலைஞர்களுக்கு உயர்த்தப்பட்ட ஒருநாள் ஊதியம்!! முதலமைச்சர் உத்தரவு!!

Photo of author

By Gayathri

கிராமிய கலைஞர்களுக்கு உயர்த்தப்பட்ட ஒருநாள் ஊதியம்!! முதலமைச்சர் உத்தரவு!!

Gayathri

Increased daily wages for village artists!! Chief Minister's order!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் பொழுது நடைபெறும் ” சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ” கிராமிய கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு நாள் ஊதியம் ஆக 5000 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறக்கத்திருக்கிறார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நேற்று ( ஜனவரி 14 ) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள 18 இடங்களில் இன்று ( ஜனவரி 15 ) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு 1500 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று இருப்பதாகவும், இவர்கள் 75 கலை குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கு பெறக்கூடிய கிராமிய கலைஞர்களுக்கு உணவு, 2 உடைகள், தங்குவதற்கான இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தையும் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருவதையும் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர கிராமிய கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 5000 ரூபாய் உயர்த்தி வழங்க தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.