பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்!
கேரளாவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆனாலும் முககவசம் போன்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது குறிப்பித்தக்கது.நடப்பாண்டில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். மேலும் கடந்த தினக்களில் தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில்.
மகரஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் முந்தைய நாளே மலைக்கு வருவதினால் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை சமைக்க தடை விதிக்கப்பட்டது.தீயினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.சமையல் பொருட்களை விற்கவோ,சன்னிதானத்திற்கு எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடி வருவது வழக்கம்.பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் பம்பை நதியில் கோலிபார்ம் என்ற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருகின்றது.மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜையின் போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிபார்ம் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த கோலிபார்ம் பாக்டீரியா அதிகரிபதற்கு காரணம் பக்தர்கள் குளித்து விட்டு அங்கேயே ஆடைகளை விட்டு செல்வது தான் என கூறப்படுகின்றது.இதன் மூலம் மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது .மேலும் அணையில் இருக்கும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.