அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கடத்துவதை தற்பொழுது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் பொருட்கள் கடத்துவது குறித்து ஏதேனும் புகார்கள் வருவது வழக்கமாகத்தான் உள்ளது. அந்த வகையில் சமீப காலமாக சேலத்தில் ரேஷன் அரிசியை கடத்துவதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக விசாரித்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 38 ரேஷன் அரிசியை இங்கிருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயற்சித்த நிலையில் போலீசார் சென்று அதனை தடுத்து நிறுத்தினர். அந்த கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் தப்பி சென்றது. தனிப்படை போலீசார் வைத்து விசாரணை செய்ததில் நான்கு பெயரை முதலில் கைது செய்தனர்.
இவ்வாறு பெரிய அளவில் கடத்தலுக்கு ஆயுதபடுத்தும் தலைவர் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தப்பி சென்ற மீதமுள்ள நால்வரையும் வலை வீசி தேடி வருகின்றனர். சேலத்தில் இவ்வாறு அடிக்கடி ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் இந்த பொருட்களை அவர்களிடம் சென்றடைய விடாமல் கடத்துவது சட்டத்திற்கு புறம்பானது. பலர் இந்த ரேஷன் பொருட்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதும் உண்டு. அவ்வாறானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும்.