அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் ! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!! 

Photo of author

By Amutha

அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் ! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!! 

வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. படுகாயம் அடைந்த அந்த சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்கே உள்ள ஒரு வீட்டில் 9 வயதான ஜான்வி என்ற சிறுமி தனது வீட்டின் முன்னால் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது 3 தெருநாய்கள் பாய்ந்து சிறுமி ஜானவியை தலை, கைகள், மற்றும் கால்களில் மாறி மாறி பலமுறைக் கடித்துள்ளது.

தெருநாய்கள் கூட்டம் கண்மண் தெரியாமல் கடித்ததில் சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் உள்ள ஒரு முதியவர் வந்து சத்தம் போட்டு விரட்டியதும் தான் அந்த நாய்கள் சிறுமியை விட்டு ஓடியுள்ளன. படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதே பகுதியில் ஏற்கனவே ஒரு சிறுவன் தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நிஹால் என்ற 10 வயது சிறுவனை இதேமுழப்பிலங்காட்டில் உள்ள தெரு நாய்கள் கடித்து தாக்கியதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதன் காரணமாக தெரு நாய்களை பிடிக்கும் பணிகள் உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு சுமார் 31 நாய்கள் பிடிக்கப்பட்டன.