கைவிடப்படுகிறதா இந்தியன் 2! – உண்மை நிலவரம் என்ன?

0
110

கைவிடப்படுகிறதா இந்தியன் 2? – உண்மை நிலவரம் என்ன?

1996ம் ஆண்டு AM ரத்னம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல், மனிஷா கொய்ரலா, ஊர்மிளா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘இந்தியன்’.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளிலும் மொழிமாற்ற செய்யப்பட்டு, அதிலும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. படத்தினை தெலுங்கு தயாரிப்பாளரானதில் ராஜு தயாரிக்க, ஷங்கர் இயக்க, கமல் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகும் எனக் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் தில் ராஜு படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலக, ரிலையன்ஸ், லைகா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஷங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

லைகாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட 250 கோடியில் இப்படத்தினை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்த செய்யப்பட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே தொடர்ந்து தடங்கல்களைச் சந்தித்து வந்ததால் இன்னும் படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் நடைபெற்றபோது அதில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட இரண்டு உதவி இயக்குநர்கள், இரண்டு ஃபெப்சி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். இதனையடுத்து படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரும்ப எப்பொழுது படப்பிடிப்பைத் துவங்க முடியுமென்று தெரியாமல் தவிப்பில் இருக்கிறார் ஷங்கர்.

இதற்கிடையே லைகா சமீபத்தில் தயாரித்த எந்த படங்களும் சரியாகப் போகாத நிலையில் கடும் நிதி நெருக்கடியில் அந்த நிறுவனம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தினை கைவிடும் முடிவிற்கு வந்துள்ளதாம். இதனை ஷங்கரிடமும் தெரியப்படுத்தி விட்டார்களாம்.

இதனால் இப்படத்தினை கைமாற்ற ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். கமலின் அரசியல் நிலைப்பாட்டால் வேறு எந்த தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரிக்க முன் வந்தாலும் அரசு சிக்கலை ஏற்படுத்தும் என கணக்கிடும் ஷங்கர், சன் பிக்சர்சிடம் இப்படத்தைக் கைமாற்றி விடும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

க்கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் ‘இந்தியன் 2’ என்ற அறிவிப்பு வரும் அடித்து கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Previous articleசலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்
Next articleகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு