ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறும் இந்தியா!! மத்திய அரசின் ஆட்சி முறையில் சாதனை!!

Photo of author

By Gayathri

உலக நாடுகளில் ஊழல் நாடுகளில் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின் படி 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இந்தியாவானது முன்னேறி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

Transparency international என்ற அமைப்பானது 1995 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ஊழல் குறைந்த நாடுகளுடைய பட்டியலை கணக்கெடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டதில் இந்தியா 96 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் தரவரிசை படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் மதிப்பானது 0 முதல் 100 மதிப்பெண்கள் என கணக்கிடப்படுகிறது. 0 எனில் ஊழலுக்கு பஞ்சம் இல்லாத நாடு என்றும் ஊழலில் முதலிடம் பிடித்த நாடு என்றும் குறிப்பிடப்படும். 100 மதிப்பெண் பெறக்கூடிய நாடானது ஊழலற்ற நாடு என்ற மதிப்பினை பெறும். இதன்படி இந்தியாவிற்கு 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டில் 38 மதிப்பெண்கள் என்பது ஊழல் பட்டியலில் இந்தியாவினுடைய முன்னேற்றத்தை குறிக்கிறது.

உலக அளவில் ஊழல் ஆனது மக்களை பாதிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாகவும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றிருப்பது மக்களுடைய மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்றும் 2024 CPI அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.