இவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை… இந்த இரு அணிகள்தான் பைனலி- சேவாக் கணிப்பு!

0
145

இவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயம் இல்லை… இந்த இரு அணிகள்தான் பைனலி- சேவாக் கணிப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று சேவாக் கணித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டி நாளை நடக்க உள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலகக்கோப்பை தொடரில் மிகவும் வலுவாக இருக்கும் இரு அணிகளாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பார்க்கபடுகின்றன. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் “ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வெல்வது சாதாரண விஷயம் இல்லை. அவர்கள் மண்ணில் தொடர் நடப்பது அவர்களுக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள். இந்திய அணியில் இளம் வீரர்களும் அனுபவம் உள்ள வீரர்களும் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி தாண்டி செல்வது குறித்து சேவாக், சுரேஷ் ரெய்னா, கவாஸ்கர்  உள்ளிட்டவர்கள் பாஸிட்டிவ்வாக பேச, கபில்தேவ் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் எதிர்மறையாக பேசியுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ள மெல்போர்னில் நேற்று வரை மழை பெய்துள்ளது. இதனால் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்தை விட ஒளிபரப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும். இந்த போட்டிக்கான விளம்பரக் கட்டணங்கள் மற்ற போட்டிகளை விட அதிகம். அப்படி போட்டி நடக்காவிட்டால் விளம்பரம் மூலம் வரும் வருவாய் அனைத்தும் ஒளிபரப்பாளர்களுக்கு நஷ்டமாக அமையும்.

Previous articleநேற்று வரை கொட்டித் தீர்த்த மழை… இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்காவிட்டால் பல கோடி நஷ்டம்!
Next articleதனது உத்தேச இந்திய அணியை வெளியிட்ட கம்பீர்… முக்கிய வீரருக்கு இடமில்லை!