இந்திய எல்லையில் சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார் -டிரம்ப் பேச்சு

Photo of author

By Jayachandiran

இந்தியா – சீனா இடையிலான எல்லை சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் அண்டை நாடான சீனாவுடன் நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. இதுகுறித்த சிக்கல் எழும்போது இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களும் பலமாக மோதிக் கொண்டதில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சீன ராணுவம் முள் கம்பிகளை கொண்டும், கற்களை கொண்டும் தாக்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா ஒரு முரட்டு நடிகர் என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியபோது; இந்திய மற்றும் சீனா நாடுகளுக்கிடையே நாங்கள் பேசுகிறோம். அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. இரு நாடுகளும் பலத்த சேதத்தை சந்தித்திருப்பதாகவும் அவசியமெனில் நாங்கள் உதவத் தயார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.