மூன்று பார்மட்டிலும் கலக்கும் இந்திய அணி… தரவரிசையில் முன்னிலை… ஐசிசி அறிவிப்பு

0
227

மூன்று பார்மட்டிலும் கலக்கும் இந்திய அணி… தரவரிசையில் முன்னிலை… ஐசிசி அறிவிப்பு

ஐசிசி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

கடந்த சில மாதங்களாக டி 20 தொடர்கள் எதையும் இந்தியா இழக்கவில்லை. வரிசையாக பெற்ற தொடர் வெற்றிகளை அடுத்து இப்போது டி 20 அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி நம்பர் 1 இடத்துக்கு சென்றுள்ளது. ரோஹ்த் ஷர்மா தலைமை ஏற்றபின்னர் இந்திய அணி தொடர்ந்து 14 டி 20 போட்டிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுபோல டெஸ்ட் தரவரிசையில் 2 ஆம் இடத்திலும், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here