இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

0
124
Brazil-promises-to-help-India-in-NSG-entry-News4 Tamil Latest Online National News in Tamil
Brazil-promises-to-help-India-in-NSG-entry-News4 Tamil Latest Online National News in Tamil

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை இருநாடுகளும்  செயல்திறன் முறையில் அதிகரிப்பதை இந்த உடன்படிக்கை நோக்கமாக கொண்டிருக்கும். நாடுகளுக்கு இடையிலான குற்றங்கள், பயங்கரவாதத்துடன் அதற்கான தொடர்புகள் விஷயத்தில் இந்த உத்தேச உடன்படிக்கை விரிவான சட்ட வரைமுறைகளை வழங்கக்கூடியதாகும்.

தேடுதல், கட்டுப்படுத்துதல், போலிகளை களைதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற விஷயங்களில் பிரேசிலுடன் குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணை மற்றும் விசாரணையில், இருதரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு இது உதவும்.

Previous articleகாதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!
Next articleஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு