இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி வெறும் 104 ரன்களில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. இதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை செய்துள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாம் நாள் இன்று தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆல் அவுட் ஆனதில் குறைந்து ரன் இதுவே ஆகும். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 77 ஆண்டுகளுக்கு பின் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இதற்கு முன் 1947 சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் தற்போது இந்த போட்டியில் குறைவான போட்டியில் ஆல் அவுட் ஆன மோசமான சாதனையை செய்துள்ளது.