இந்தியா – சீனா மோதல்! கொரோனா தான் காரணம்!

Photo of author

By Parthipan K

இந்தியா சீனா மோதலுக்கு கொரோனா பரவல்தான் காரணம்  என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும்  கடந்த திங்கக்கிழமை இரவு தாக்குதல் நடந்தது ,அதில்  இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.இந்த மோதலுக்கு கொரோனா பரவுதலும் காரணமாக இருந்துள்ளது. இந்திய திபெத் எல்லையில் இந்திய ராணுவம் வருடம்தோறும் கோடைக்கால கூட்டு பயிற்சி முகாம் ஒன்றை நடத்துவது வழக்கம்.

இந்த பயிற்சி   திபெத் எல்லையில் நடைபெறும். இவ்வருடம் மார்ச் மாதத்தில் இப்பயிற்சியில் கலந்து கொள்ள இருந்த வீரர்கள் சிலருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. இதனால் இப்பயிற்சி நடத்தப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் இந்தியா பாதிக்கப்பட்ட காரணத்தினால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, பல இடங்களில் கூட்டம் கூடுவது முழுவதுமாக தடை செய்யப்பட்டது. அதனால் எல்லைப்பகுதிகளில் பயிற்சி முகாம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் இந்தியப்படையினர் ஒருவரும் பயிற்சிக்கு திபெத் எல்லைக்கு வரவில்லை, நம்மைப்போல் சீனாவும்  எல்லைப் பகுதியில் கோடை கால ராணுவ பயிற்சியை மேற்கொள்வது வழக்கமாகும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அங்கேயும் பயிற்சிகளை தள்ளிவைத்தது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அதாவது குறிப்பாக களவான் பள்ளத்தாக்கில் வந்து பயிற்சி முகாமிடத் தொடங்கினர். ஒரு சில சீன வீரர்கள் ஏரி பகுதியில் முகாமிட ஆரம்பித்தனர்.

இதனை மிக தாமதமாக அறிந்து கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் ஊரடங்கு தடைகளை மீறி லடாக் எல்லை பகுதியில் தனது வீரர்களை பாதுகாப்பு நடவடிக்கைக்காக குவிக்கத் தொடங்கினர். இந்திய வீரர்களின் தாமதத்தால் அங்கு ஏற்கனவே சீனப் ராணுவ படையினர் ஏராளமாக குவிந்திருந்தனர்.

இந்நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கிடையே நடந்தபோதும், சீனா மேலும் எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவித்தது, சீன இராணுவம் தற்போது எல்லையில் இருந்து செல்வதாக கூறிய போதிலும்நம்ப  தகுந்தது போல் இல்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே  கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்திசீனர்கள் இந்திய எல்லை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.