இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அக்டோபர் வரை இதன் தாக்கம் இருக்கும் என்பதால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது பாதுகாப்பாக இருக்காது.
மருத்துவ பாதுகாப்புடன் அடுத்த மாதம் நடக்க இருக்கும் இங்கிலாந்து – வெஸ்ட் இன்டீஸ் நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியானது, கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்கலாமா? வேண்டாமா? என்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் விளையாட்டு மைதானத்தில் குறைந்த பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்கும் ஆஸ்திரேலியாவின் அறிவிப்பால் அங்கு 20 ஓவர் போட்டி நடக்க வாய்ப்புள்ளதாக அமைந்துள்ளது. இருபது ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி நடத்தினால் அக்டோபர் மாதத்தில் போட்டியை நடத்துவது சிரமமாகிவிடும். ஆகவே செப்டம்பர் மாதம் போட்டியை நடத்தலாம். இது பருவமழைக் காலம் என்பதால் இந்தியாவில் போட்டியை நடத்த இயலாது.
இதற்கு மாறாக செப்டம்பரில் ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்தலாம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு அணியும் இரண்டுமுறை மோதுவதற்கு பதிலாக ஒருமுறை மட்டுமே மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்கி நடத்தினால் சாத்தியமானது என்றும் கூறியுள்ளார். இலங்கை மட்டுமல்லாது ஐக்கிய அமீரகத்திலும் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.