உலகக் கோப்பையில் முதன்முறையாக இந்தியாவை வென்று பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது
2021 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவுக்கெதிராக வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக பாகிஸ்தானும், தொடர் வெற்றி சரித்திரத்தை தொடர்ந்து எடுத்து செல்லும் நோக்கில் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின்
இதனையடுத்து, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் சாகின் அப்ரிடி. ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரிலே கே.எல்.ராகுலையும் வெளியேற்றினார் சாகின் அப்ரிடி.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் விராட் கோலி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார்.
பின்னர் வந்த ரிசப் பண்ட், விராட் கோலியோடு ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இந்த ஜோடி 53 ரன்கள் பார்ட்னர்சிப் சேர்க்க அணியின் ஸ்கோர் 84 ஆக இருந்த போது சதப் கான் வீசிய 13 வது ஓவரில் ரிசப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் விராட் கோலி அரை சதத்தை கடந்த நிலையில் 57 ரன்களுக்கு சாகின் அஃப்ரிடி பந்து வீ்ச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 11 ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் சாகின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது ரிஷ்வான் 55 பந்துகளில் 79 ரன்களும், பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முதலாக இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
3 முக்கிய விக்கெட்டுகளை (ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி) வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர் சாகின் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதை பெற்றார்