பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!

0
160

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றது.

இந்தியாவின் ஜோத்பூர் என்கின்ற ஊரின் வடக்கு விமான படைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்களுடன் ஏ 330 மற்றும் ஏ 400 எம் போன்ற போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவும் தனது ரபேல் விமானங்களை இந்த பயிற்சிக்கு தரையிறங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியா தனது போர் விமானங்களான மிராஜ் 2000 மற்றும் சூ 30 எம்கேஜி போன்ற விமானங்களையும் இந்தப் பயிற்சிக்காக களமிறக்கியுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் மொத்தம் 175 விமானப்படையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Previous articleவீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!
Next articleகொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!