இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
350 பேர் மட்டும் வாழக்கூடிய அகலேகா தீவில் மீன்பிடித்தல் மற்றும் தென்னை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளை மட்டுமே மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த தீவிற்கான உணவுப் பொருட்கள் வருடத்திற்கு நான்கு முறை மொரீஷியஸ் நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவானது மொரீஷியஸ் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கடல்வழிப் போக்குவரத்தை மேலும் வலிமைப்படுத்த உதவும் வகையில் தற்பொழுது இந்த திட்டம் ஒப்பந்தம் ஆகி உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகால மருத்துவ சேவைகளுக்காக, விதிவிலக்காக சிறிய நிலப்பகுதி விமானத்தின் ஓடுபாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது அந்த தீவில் தற்பொழுது விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கட்டடம் இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி ஆய்வாளரான சாமுவேல் பேஷ்ஃபீல்ட் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தீவை குறித்த, புதிய செயற்கைக்கோள் படங்கள் கிடைத்திருப்பதால், இந்தியப் பெருங்கடல் தகவல் தொடர்பில் அகலேகா தீவின் பங்கை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ளலாம்,” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த தளத்தை “கண்காணிப்பு நிலையம்” என்கிறது, இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிராட்டஜிக் ஸ்டடீஸ் எனும் நிறுவனம். மொரீஷியஸின் மற்ற இடங்களில் உள்ள, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாதனத்தை ஒத்த கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பும் அதில் இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இவ்வாறாக இந்தியா தன்னுடைய ராணுவ தளமாக இந்த தீவினை மாற்றினால் இந்த தீவில் வாழும் மக்கள் இந்த தீவினை விட்டு வெளியேறப்பட வேண்டிய நிலை உருவாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.