ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

0
193

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

இதனால் இந்திய அணி ஓரளவு நிலைபெற்ற நிலையில் மயங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஹனுமா விஹாரியும் ரஹானேவும் தற்போது களத்தில் உள்ளனர்.

Previous articleபேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை
Next articleசன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here