சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!
சீனாவை முந்திய இந்தியா. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் ஐ.நா. சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது.
சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் அதிக மக்கள் தொகை இருந்தாலும், அந்த மக்களுக்கு தேவையான மருத்துவம், உணவு இருப்பிடம், இயற்கை சூழல் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவை விட மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, இது ஒரு வகையான ஆபத்துதான் என்று மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கவனத்தில் கொண்டு ஒரு சில திட்டங்களை கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.