இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

0
136

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் மோத உள்ளன.

2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

கடந்த முறைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளும் மோது போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி நடக்கும் அன்று மைதானம் இருக்கும் பகுதியில் சுமார் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகார் வாங்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீபாவளி ஆஃபர்!
Next articleதினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?… யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து!