இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

0
239

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற முதல் தோல்வியாகும். அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி  காத்திருக்கிறது.

இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று இரு நாட்டு அணிகளும் விளையாட உள்ள வீரர்களைக் கொண்ட உத்தேச அணி குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. இதில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைக்காது என சொல்லப்படுகிறது.

இந்தியா உத்தேச அணி

ரோஹித் ஷர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்

பாகிஸ்தான் உத்தேச அணி

முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது ஹஸ்னைன், ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா/ஷாநவாஸ் தஹானி

Previous articleபொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!
Next articleஇயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here