தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

0
297
#image_title

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கோப்பை போட்டி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தொடர் வெற்றியில் இருந்த இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

புளோரிடா மாகாணத்தில் நடைபெறவிருந்த T20 உலகக்கோப்பை போட்டியின் 33 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் மழை காரணமாக அப்போட்டியானது டாஸ் போடாமலே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய அணியானது அடுத்து நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றியால் சூப்பர் சுற்றுக்கு முன்னேறிய பெருமையை பெற்றுள்ளது.

முன்னதாக ஐசிசி T20 உலககோப்பை 2024 போட்டியானது மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் குரூப் A, குரூப் B, குரூப் C மற்றும் குரூப் D என நான்கு பிரிவுகளாக பிரித்து லீக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களில் வரும் அணிகளுக்கு இடையே சூப்பர் சுற்று நடைபெறும். அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் சூப்பர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் நேற்று நடைபெறவிருந்த போட்டி வெறும் சம்பிரதாயமாக தான் பார்க்கப்பட்டது. எனினும் அதிலும் வெற்றியுடன் சூப்பர் சுற்றுக்குள் நுழைய இந்திய அணி தயாராகி வந்தது.

இந்நிலையில் மழை காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால் தோல்வியே இல்லாமல் சூப்பர் சுற்றுக்குள் நுழையும் பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.