கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

Photo of author

By Rupa

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது.இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.

மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வில்லை என்றாலும் உயிர் சேதங்களை கண்டு விழிப்புணர்வுடன் தற்பொழுது தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.அதனையடுத்த மக்கள் தற்பொழுது மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகளவு காணப்படுகிறது.மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் புது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் என்ற ஒன்றை அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.21 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 230, 278, 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை 98 ஆயிரத்து 118 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பால் கடைசி கட்டத்தில் உள்ளனர்.இந்த தொற்றானது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தவிர குறைந்ததாக சாத்தியமில்லை.

அதேபோல் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா ,இந்தியா ,பிரேசில் ,பிரிட்டன் ,ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களை பெற்றுள்ளது.மக்கள் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றுவதன் மூலமே இத்தொற்றை படிப்படியாக குறைக்க முடியும்.