நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கிலிருந்து நோய் தொற்று பாதிப்பு மெல்ல ,மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் அந்த பாதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு சென்றதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்களும், பல நிறுவனங்களும், சிறு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இப்படியான சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் முதல் அலை மெல்ல ,மெல்ல குறைந்து வந்தது ஆனால் திடீரென்று 2வது அலை உண்டாகி அனைவரையும் பயமுறுத்தியது.

அதோடு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை விடவும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் தற்போது வரையில் வாரம் ஒரு முறை அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் இனி தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை தற்சமயம் உருவாகி இருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 58 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 231 நாட்களில் இல்லாத அளவில் குறைவு என்று சொல்லப்படுகிறது.

இதுவரையில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373 ஆக அதிகரித்தது நேற்று அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 6 ஆயிரத்து 676 ஆக பதிவானது. அதேபோல மகாராஷ்டிராவில் ஆயிரத்து 485 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அதேபோல தமிழகத்தில் ஆயிரத்து 192 பேரும், மிசோரம் மாநிலத்தில் 953 நபர்களுக்கும், மேற்குவங்கத்தில் 690 நபர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. மற்ற எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்றைய பாதிப்பு 500 க்கும் குறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

நோய்தொற்று பாதிப்பால் கேரள மாநிலத்தில் 60 நபர்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருபத்தி ஏழு நபர்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 164 பேர் பலியாகி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், புது டெல்லி, உட்பட நாடு முழுவதும் இருபத்தி ஒரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 454 அதிகரித்து இருக்கிறது.

புதிய பாதிப்பை விட நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் 19 ஆயிரத்து 470 நபர்கள் பூரண நலம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் பூரண குணமடைந்து வரும் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 801 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 118 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இது கடந்த 227 தினங்களில் இல்லாத அளவில் குறைவு என்று சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்றையதினம் 87 லட்சத்து 41 ஆயிரத்து 160 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 98 கோடியே 67 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே நேற்றைய தினம் 11 லட்சத்து 86 ஆயிரத்து 314 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது, இதுவரையில் ஒட்டுமொத்தமாக 59 .31 ஒரு கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருப்பதாக தெரிகிறது.