இந்தியாவில் மள மளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,011 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4,45,97,498 என அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,40,32,671 என அதிகரித்துள்ளது. தற்சமயம் 36,126 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைய விட 1,318 குறைவு என்று சொல்லப்படுகிறது.

நோய் தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 28 பேர் பலியாகியுள்ளார்கள். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 20 இன்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அடங்கும் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,28,701 என அதிகரித்துள்ளது.