விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

0
96
Shooting in the plane! Action decision of the airlines!
Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர்.

அப்போது அவருடைய காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரிய வந்தது.நடுவானில் பறக்கும் விமானத்தில் இருக்கும் பயணியின் காதில் துப்பாக்கி குண்டு பயந்ததால் அதற்கு காரணம் சக பயணிகளிடம் துப்பாக்கி உள்ளது என சந்தேகம் அடைந்து அனைவரையும் சோதனை செய்தனர்.ஆனால் சக பயணிகளிடம் துப்பாக்கி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக விமானத்தை சோதனை செய்து பார்த்தனர்.அப்போது அந்த துப்பாக்கி குண்டானது விமானத்தின் தரை பகுதியை துளைத்து கொண்டு பயணியை தாக்கியது தெரியவந்தது. அதனையடுத்து விமானம் தரையிறங்கியது அந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அரசுக்கு எதிராக போராடும் பயங்கரவாதிகள் தான் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர் என கூறுகின்றனர்.

அரசின் அந்த குற்றச்சாட்டுக்கு  கிளர்ச்சி படை மறுப்பு தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து லோகாவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K