இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. இதில் அப்போது இருந்த பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நட்புறவை கொண்டிருந்தார் அதனால் தற்போது இந்திய அடிக்கலாம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.
இவர் ராஜினாமா செய்த பிறகு இடைக்கால அரசு முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்தியாவின் எதிரி நாடுகளுடன் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொண்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா வை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இடைக்கால அரசு கோரிக்கை வைத்தது.
மேலும் அவரின் பாஸ்போர்ட்டை வங்கதேசம் முடக்கி வைத்துள்ள நிலையில் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை நீட்டித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கம் வாய்த்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இவ்வாறு செய்துள்ளது இந்தியா. ஷேக் ஹசீனா மற்றும் 96 நபர்களின் பாஸ்போர்ட்டை வங்கதேச அரசு நேற்று அறிவித்தது. அடுத்த நாளான இன்று ஒரே நாளில் பதிலடி கொடுக்கும் வகையில் விசா காலத்தை நீடித்துள்ளது இந்தியா என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.