மழையால் தாமதம்… 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார்.
இன்று மதியம் 1.30 மணிக்கு லக்னோவில் வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்த போட்டி தொடங்க இருந்த போட்டி மழைக் காரணமாக 2 மணிநேரத்துக்கு மேல் தாமதமானது. இதையடுத்து தொடங்கப்பட்ட போட்டி 40 ஓவர்களாக குறைக்கபட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தற்போது வரை 6 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேர்த்துள்ளது.
இந்திய அணி
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (வி.கே.), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென் ஆப்பிரிக்க அணி
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக் (wk), டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி