முதல் ஒருநாள் போட்டி:தொடக்க ஆட்டக்கார்கள் ஏமாற்றம! இந்தியா நிதான ஆட்டம்!

Photo of author

By Parthipan K

முதல் ஒருநாள் போட்டி:தொடக்க ஆட்டக்கார்கள் ஏமாற்றம! இந்தியா நிதான ஆட்டம்!

நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின் களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி அணியை சர்வில் இருந்து மீட்டு வருகின்றனர். சற்று நேரம் முன்புவரை இந்திய 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளது. கோலி 26 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.