எதிரி நாடுகளை கொலை நடுங்க வைத்த ‘அக்னி 5’- இந்தியாவின் அடுத்த மகுடம் !

Photo of author

By Parthipan K

5000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது இந்தியா

அக்னி 1, அக்னி 2, அக்னி 3,அக்னி 4 வரிசையின் அடுத்த கட்டமாக, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று இலக்கை அழிக்கும் திறன் கொண்ட ‘அக்னி 5’ என்ற பெலிஸ்டிக் வகையிலான ஏவுகணையை சோதனை செய்துள்ளது இந்தியா.

ஒலியை விட 24 மடங்கு வேகமாக செல்லும் இந்த ஏவுகணையானது, ஒரு நொடிக்கு 8.16 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு மணி நேரத்திற்கு 29401கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் சக்தி பெற்றது.

அணு ஆயுத்தையும் ஏந்திச் செல்லும் திறன் மிக்க இந்த ஏவுகணையானது 17.5 மீட்டர் உயரமும் கொண்டது. அக்டோபர் 27 அன்று, ஒடிசா மாநிலத்தில் உள்ள ‘அப்துல்கலாம் தீவில்’ வைத்து இரவு 7.50 மணியளவில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவப்பட்ட இந்த ஏவுகணையாது இலக்கை 18-20 நிமிடங்களுக்குள் தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே, இந்திய எல்லையில் சீனா ஊடுருவியும், படை திரட்டியும் இடையூறு அளித்து வரும் நிலையில், சமீபத்தில் சீனா வெளியிட்ட நில எல்லைச் சட்டமானது இந்தியாவின் எல்லை கொள்கைக்கு எதிராக இருந்தது. இந்த சூழலில் இந்தியாவின் ‘அக்ணி 5’ ஏவுகணை சோதனையானது, இந்தியாவின் பலத்தை சீனாவிற்கு மட்டுமின்றி, உலகிற்கே எடுத்துக் கூறும்படியாக உள்ளது.