இடுகாடாக மாறும் இந்தியா! உச்சத்தை தொட்ட கொரோனா பலி!
கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனா தொற்றானது சுனாமி போல அதிவேகத்தில் பரவி வருகிறது.தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளனர்.இருப்பினும் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவைக்கு அதிக தட்டுப்பாடுகள் காணப்படுகிறது.
குறிப்பாக டெல்லியில் அதிக அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பலியாகி வருகின்றனர்.டெல்லியில் சடலங்களை எரிக்கவே போதுமான இடங்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.சில பூங்காக்கள் இடுகாடுகளாக மாறியுள்ளது.அதுமட்டுமின்றி நாடு முழுவதிலும் ரெம்டெசிவெர் தடுப்பூசிக்கும் அதிக அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இத்னைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார்.அந்தவகையில் இன்றுக்கூட மத்திய அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.
தற்போது கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 3,500 தாண்டி செல்கிறது.சுகாதாரத்துறை 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள்,உயிரிழந்தவர்கள்,குணமடைந்தர்வர்களின் பட்டியலை வெளியிடும்.அந்தவகையில் தற்போது 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,86,452 ஆக உள்ளது.அதே கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,498 ஆக உள்ளது.தொற்றிலிருந்து ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,540 ஆக உள்ளது.தற்போது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.11% ஆக உள்ளது.அதே கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 16.90 ஆக உள்ளது.இவ்வாறு பலி எண்ணிக்கை அதிகரித்து வந்தால் இந்தியா முழுவதும் இடுகாடாக மாறும் நிலை ஏற்படும்.