பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்!
உலக நாடுகள் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரு நாட்டின் லிமா நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது.
அமெரிக்கா 4 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் இன்று மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இதன் மூலம் அவர் மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர்களுடன் இணைந்து சரப்ஜோட் சிங்குடன் இணைந்து பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரிதம் சாங் வான் மற்றும் ஷிகா நர்வாலுடன் இணைந்து பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 16 – 12 என்ற கணக்கில் பெலாரஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.
நவீன், சரப்ஜோட் சிங் மற்றும் சிவா நர்வால் ஆகியோருடன் இணைந்த ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி பெலராஸ் அணியை 16 – 14 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் போட்டியின் முதல் ரவுண்டில் இருந்து ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்று வருகின்றனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் நிஷா கன்வார், ஷீனா கிட்டா மற்றும் ஆத்மிகா குப்தா முதல் ரவுண்டில் வெற்றி பெற்றனர். எனினும் 2-வது சுற்றில் ஹங்கேரி அணியினரிடம் இருந்து தோல்வி அடைந்தனர். இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளனர். முன்னதாக ஆத்மீக மற்றும் ராஜ்ப்ரீத் சிங் இணைந்து 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. ராஜ்ப்ரீத் சிங் இந்த சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.