இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

இடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு வுஹான் பகுதியில் சீனாவில் தொடங்கியது.அங்கு தொடங்கி நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து படிப்படியாக அனைத்து அண்டை நாடுகளிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் அதிக அளவு வீழ்ச்சியடைந்திருந்தது.குறிப்பாக அமெரிக்கா,பிரேசில்,பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் இந்தியா அதிக அளவில் பாதித்தது.

இந்தியாவானது கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காவது இடத்திலிருந்தது.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி தீவிரமாக பரவி வருவதால்,இந்தியா அமரிக்காவுக்கு நிகராக இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.நாளுக்கு நாள் இந்த 2-ம் அலை தொற்று அதிக அளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவில், டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுகிறது.நாளுக்குநாள் கொரோனா தொற்றால் ஆயிரகணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.அவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு இடங்கள் இல்லாமல் டெல்லியில் பூங்காக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பலர் வெகு நேரங்கள் காத்திருந்து இருதி சடங்குகளை செய்யும் நிலைக்கு தற்போது இந்தியா தள்ளப்பட்டுள்ளது.மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.ஆக்சிஜன் பற்றாக்குறையாலும்,தடுப்பூசி பற்றாக்குறையாலும் இந்தியா தலைவிரித்து ஆடுகிறது.இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் 24 மணி நேரத்திற்கு கொரோனாவால் பாதித்தவர்கள்,உயிரிழந்தோர்,பட்டியலை வெளியிடும்.அவ்வாறு வெளியிட்டதில் இந்தியாவில் கடந்த ஓர் நாளில் கொரோனா தொற்றால் மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,14,188 ஆக உள்ளது.இத்தொற்றிலிருந்து ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,517 ஆக உள்ளது.இத்தொற்று பரவலை தடுக்க முடியாமல் பல மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் மக்கள் அனைவரயும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே சென்றால் இந்தியாவிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுவர்.தற்போதே அண்டை நாடுகள் இந்தியர்கள் வருவதற்கு தடை விதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment