இந்தியா vs ஆஸ்திரேலியா T20 போட்டி: அதிரடி காட்டிய இந்திய வீரர்கள்.. அரண்ட ஆஸ்திரேலியா அணி!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 வது போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சத்தத்தை கடந்தார். ஜெய்ஸ்வால் 53 ரன்களில் வெளியேற அடுத்து விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் அரை சத்தத்தை கடந்த நிலையில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் அதிரடி மன்னன் இஷான் கிஷான் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து சக வீரர்களுக்கு உத்வேகம் அளித்தார். கேப்டன் சூர்யா குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். எப்பொழுதும் போல் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் 19வது ஓவரில் மூன்று ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் எடுத்து இந்திய அணியின் இலக்கை உயர்த்தினார். அதன்படி 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 235 ரன்களை குவித்தது.
236 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன் பின் விளையாடிய ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களில் அவுட்டாக பின்னர் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 12 மற்றும் டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்து ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தனர்.
பிறகு மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்களில் அவுட்டாக தொடர்ந்து வீரர்கள் யாரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
மேலும் 44 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்தியா 5 போட்டிகளை கொண்ட T20 தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.