இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

Photo of author

By Divya

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

Divya

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் நேற்று 3வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக விளையாடிய ரூத்ராஜ் கெய்க்வாட் அவர்கள் இறுதி ஓவர் வரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 123 ரன்கள் குவித்து அசத்தினார்.

இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

223 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்து போட்டியில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி சார்பாக விளையாடிய மேக்ஸ்வல் 104 ரன்களை குவித்து அசத்தினார். இவருக்கு அடுத்தப் படியாக 35 ரன்களை டிராவிஸ் மற்றும் 28 ரன்களை மேத்யூ வேட் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இந்தியா 2 வெற்றியையும், ஆஸ்திரேலியா 1 வெற்றியையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.