இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!

0
177

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

முதல் ஆட்ட இறுதியில், 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 11 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 72.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்களை மட்டுமே எடுத்து இருக்கின்றது. ஆரம்பத்தில் விக்கெட் எதுவும் எடுக்காத உமேஷ் யாதவ், கடைசியில் விக்கெட் மழை பொழிந்தார். உமேஷ் யாதவ் 4,அஸ்வின் 3 என ஆஸ்திரேலிய அணியின் வீரர்களை தங்கள் கட்டுக்குள் வைத்து அந்த அணியை வீழ்த்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தொடக்கம் முதல் இறுதிவரை ஏமாற்றத்தையே கொடுத்தது. தொடக்க வீரர்கள் ப்ரித்வி 4 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 9 ரன்களுடனும் வெளியேற முதல் கோணல் ஆரம்பமானது .

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 ரன்களில் வெளியேறினார். பலராலும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா டக் அவுட் ஆகி விட்டார். விராட் கோலி 4 ரன்களுடனும் ரஹானே ரன் எதுவும் எடுக்காமலும் விகாரி 8 ரன்களுடனும் சஹா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.

அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 4 ரன்களுடனும் முகமது ஷமி ஒரு ரன்களுடனும் வெளியேறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ஓவர்களில் இந்திய அணி ஆட்டம் இழந்தது. ஒருவர்கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்க வில்லை 3 பேர் ஆகியிருக்கிறார்கள்.

இந்த நிலையிலே, 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக சுலபமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கி இருக்கின்றது ஆஸ்திரேலிய அணி. தற்போது வரை 15 ரன்கள் எடுத்து விக்கெட்டுகள் எதையும் இழக்காமல் ஆடி வருகின்றனர். அந்த அணி இன்னமும் ஒன்றரை நாட்கள் மிச்சமிருக்கும் நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் மட்டுமே தேவை படுகின்றது. அனேகமாக இன்றைக்கும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று விடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!
Next articleசாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!